நீங்கள் வேகமாக கற்கும் நபராக இருந்தால்
இந்த கட்டுரையில், விரைவான கற்றலின் அறிகுறிகளைப் பற்றி நான் உங்களுக்கு சொல்லப்போகிறேன்.நீங்கள் விரைவாக கட்பவரா பாருங்கள்
1. தெரியாததை ஒப்புக்கொள்ள தைரியம்
உங்களுக்கு உண்மையில் தெரியாவிட்டால் நீங்கள் அதை ஒப்புக்கொண்டால் நீங்கள் அதை கற்றுக்கொள்ள ஆரம்பித்து விடுகிறீர்கள்.ஏனென்றால் தெரியாத விஷயத்தை கற்றுக்கொள்ள நம் மனம் நம்மில் ஆர்வத்தை தூண்டும் .
2. செய்வதன் மூலம் கற்றல்
படிப்பதில் அல்லது வகுப்புகளுக்கு செல்வதை விட, அதை நீங்களே செய்வதன் மூலம் கற்றுக்கொள்ள நீங்கள் ஆர்வமாக இருந்தால், வேகமாக கற்றுக்கொள்ளும் திறன் உங்களுக்கு உள்ளது. நாம் படித்து கற்றுக்கொள்வதை விட வேகமாக செய்வதன் மூலம் கற்றுக்கொள்ளலாம்.
3. பல கேள்விகளுக்கு பதில்கள் இல்லை
நீங்கள் வேகமாக கற்கும் நபராக இருந்தால், உங்களுக்கு விசித்திரமான சந்தேகங்கள் வரும் அதற்கு பதில்கள் யாரிடமும் உங்களுக்கு கிடைக்காது .இதுபோல் இருந்தாலும் நீங்கள் வேகமாக கற்பவரே
4. கற்பிக்க ஆர்வமா
நீங்கள் கற்றுக்கொண்டதை ஒருவருக்கு கற்பிப்பதில் உங்களுக்கு ஆர்வம் உள்ளதா? அப்படி இருந்தால் நீங்கள் வேகமாகா கற்கும் திறனுடன் இருப்பீர்கள் ஏனென்றால் நாம் இன்னொருவருக்கு கற்பிக்கவேண்டும் என்றல் நாம் கற்போம் அல்லவா அதுவும் உங்களுக்கு கற்பிக்க பிடித்திருந்தால் நீங்கள் வேகமாகா கற்கவே விரும்புவீர்கள்
5. கற்பனையின் சக்தி
ஒவ்வொரு மனிதனுக்கும் கற்பனையின் சக்தி இருக்கிறது, ஆனால் எல்லோரும் அதை சரியாகப் பயன்படுத்துவதில்லை. பல வெற்றியாளர்கள் கற்பனை சக்தியை அவர்களின் வெற்றிக்கு காரணமாகா கூட சொல்வதை நாம் பார்க்கலாம் .அதனால் உங்களுக்கு கற்பனை சக்தியை பயன்படுத்த பிடித்திருந்தால் நீங்கள் வேகமாகா கற்கும் நபரே .
6. செயலில் கட்டுதல்
நீங்கள் வேகமாக கற்பவராக இருந்தால் எதையாவது சொல்வதை விட செய்து காட்டுவதே விரும்புவீர்கள் .உங்களுக்கு பேசிக்கொண்டு உட்கார பிடிக்காது அதை செய்து காட்டவே பிடிக்கும் .
7.ஒரு வாக்கியத்தில் பொருள்
நீங்கள் வேகமாக கற்கும் நபராக இருந்தால், பெரும்பாலும் நீங்கள் கற்றுக்கொண்டதை ஒரே ஒரு வாக்கியத்தில் தெரிவிக்கும் ஆற்றல் உங்களுக்கு இருக்கும் .இவை வேகமாக கற்றுக்கொள்ளும் திறனுக்கான அறிகுறிகள். நீங்கள் வேகமாக கற்றுக்கொள்ளும் திறனுடைய நபரா
பாருங்கள் .........................!
நன்றி
0 Comments